’கற்றது தமிழ்’, படத்தின் மூலம் தமிழுக்குள் அடியெடுத்து வைத்தவர் அஞ்சலி. தொடர்ந்து ’அங்காடி தெரு’, தூங்கா நகரம்’, ’மங்காத்தா’,’கலகலப்பு’ என பல படங்களில் நடித்தவர் திடீரென இடையில் ஏற்பட்ட சில சொந்த வாழ்க்கை பிரச்சனையால் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
பிறகு தெலுங்கில் ‘கீதாஞ்சலி’ தொடர்ந்து தமிழில் ‘அப்பா டக்கர்’,’மாப்பிள்ளை சிங்கம்’ போன்ற படங்கள் மூலம் தமிழுக்குள் ரீஎண்ட்ரி கொடுத்தார். பின் இடையில் அஞ்சலிக்கு கல்யாணம் என வதந்திகள் பரவியது. இதற்கு இல்லை என மறுப்பு தெரிவித்த அஞ்சலி தற்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார்.
ரகசிய திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு எனக்கு அவசியம் இல்லை. மேலும் எனக்கு யாருடனும் திருமணம் ஆகவில்லை. உண்மையில்லாத விஷயம் குறித்து எத்தனை நாளைக்குத் தான் பதில் சொல்ல முடியும் எனவே தான் அமைதியாகிவிட்டேன் என கூறியுள்ளார் அஞ்சலி.
0 comments :
Post a Comment