'பாய்ஸ்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து ’சச்சின்’, 'சந்தோஷ் சுப்ரமணியன்’, ‘வேலாயுதம்’ என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் செல்ல நாயகியாக வலம் வந்தவர். பின் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மும்பையில் செட்டிலாகி விட்டார்.
சமீபத்தில் சினிமாவில் நடிப்பீர்களா என கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், சினிமாவை விட்டு விலகுவதாக எப்போதும் நான் சொன்னது இல்லை. தற்காலிகமாகத்தான் ஒதுங்கி இருக்கிறேன். 12 வருடங்களாக ஓய்வு இல்லாமல் நடித்தேன். எனவே தான் திருமணத்துக்கு பிறகு கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுத்தேன்.
தற்போது மீண்டும் நடிப்பதற்கு தயாராகி விட்டேன். நடிப்பு என்பது உயிர் மூச்சு போன்றது அதை விடமுடியாது. நடிப்பு மேல் உள்ள காதல் இன்னும் எனக்கு குறையவில்லை. நடிப்பதில் தான் சந்தோஷம் இருக்கிறது. நடித்து ரசிகர்களையும் சந்தோஷப்படுத்துவேன். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

0 comments :
Post a Comment