News

அஜித்தின் 57வது படம் புத்தம் புது தகவல்


உண்மையில் யாரும் எதிர்பாராத கோணத்தில்இருந்துதான், இப்படி ஒரு ஆச்சர்யமானதகவல் கசிந்துள்ளது. அஜித்தின் 57வது படத்தை கே.வி.ஆனந்த் அல்லது விஷணுவர்தன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரில் யாரோ ஒருவர் இயக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், பிரபல மலையாள இயக்குனர் சித்திக் தான் இயக்கப்போகிறார் என்கிற விஷயம் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

 மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சித்திக்கின் பிரதாபங்கள், நம் தமிழ் ரசிகர்கள் அறிந்தது தானே..!. தமிழில் விஜய்க்கு ஃப்ரெண்ட்ஸ், காவலன் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தந்து அவர்களின் குட்புக்கில் ஏற்கனவே இடம்பிடித்தவர்தான் இந்த சித்திக். கேப்டனை வைத்து இவர் இயக்கிய எங்கள் அண்ணா படம் இன்றுவரை சின்னத்திரை சினிமாவின் செல்லப்பிள்ளை. தெளிந்த நீரோடை மாதிரியான திரைக்கதையும் ரசிகர்களை எங்கேயும் நகரவிடாம கட்டிப்போடுற நகைச்சுவையும்தான் இவரோட ஸ்பெஷாலிட்டியே.. விஜய்க்கு இரண்டு ஹிட்டுகளை கொடுத்த சித்திக், தங்களது தல படத்தை இயக்குகிறார் என்றால் அஜித் ரசிகர்களுக்கு கசக்கவா செய்யும்..? தற்போது மம்முட்டியை வைத்து, தான் இயக்கிவரும் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை சித்திக் முடிக்கவும் அஜித்தின் 56வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி முடிக்கவும், 57வது படத்திற்கான வேலைகள் தொடங்கப்படும் என தெரிகிறது. தனது முந்தைய படங்களின் ரீமேக்காக இல்லாமல் அஜித்திற்காக புதிய கதை தயார் பண்ணுகிறாராம் சித்திக்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment