சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி படத்தின் படப்பிடிப்பு
தற்போது கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. 60%
படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதமிருக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக
படமாகி வருகிறது.
விஜய் இரட்டை வேடங்களில் நடந்து வரும் இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பொங்கல் சிறப்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கத்தி படம் வெளியாகி 5 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் , இப்போது வெளியிடுவதுதான் சரி என விஜய்யும் கருத்து தெரிவித்துள்ளதால் படக்குழு தமிழ் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

0 comments :
Post a Comment