என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன. இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை… சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில்.
மங்காத்தா படத்திற்குப் பிறகு அஜித் நடித்து வெளிவந்த “பில்லா 2, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் பில்லா 2 தோல்விப் படமாக அமைந்தது. ஆரம்பம், வீரம் ஆகிய படங்கள் சுமாரான வெற்றிப் படங்களாகவும், என்னை அறிந்தால் படம் அவற்றிற்கு கொஞ்சம் அதிகமான வெற்றிப் படமாகவும் அமைந்தது. ஆரம்பம், வீரம் ஆகிய இரண்டு படங்களுமே வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என திரையுலகில் சொல்கிறார்கள்.
ஆனால், என்னை அறிந்தால் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.படத்தின் வினியோகம், வெளி மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை, மற்ற உரிமைகள் என அனைத்தையும் விற்ற வகையில் என்னை அறிந்தால் படம் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 10 கோடி வரை லாபம் கிடைத்திருக்கிறதாம். ஆனால், படத்தை எம்.ஜி. அடிப்படையில் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். அதே போல, என்னை அறிந்தால் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால், திரையரங்க வசூல் 100 கோடியைத் தாண்டவேயில்லை என்றும் சொல்கிறார்கள். மொத்தமாக சுமார் 70 கோடி வசூலைத் தாண்டியிருந்தாலே அதிகம் என்றும் சொல்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அனைவரும் சொல்லும் ஒரே விஷயம், படத்தின் வெளியீடு பொங்கலுக்கு இருந்திருந்தால், வசூல் நிலவரமே வேறாக இருந்திருக்கும் என்கிறார்கள்.என்னை அறிந்தால் படத்தில் நஷ்டமா…!
என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன. இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை… சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில்.
மங்காத்தா படத்திற்குப் பிறகு அஜித் நடித்து வெளிவந்த “பில்லா 2, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் பில்லா 2 தோல்விப் படமாக அமைந்தது. ஆரம்பம், வீரம் ஆகிய படங்கள் சுமாரான வெற்றிப் படங்களாகவும், என்னை அறிந்தால் படம் அவற்றிற்கு கொஞ்சம் அதிகமான வெற்றிப் படமாகவும் அமைந்தது. ஆரம்பம், வீரம் ஆகிய இரண்டு படங்களுமே வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என திரையுலகில் சொல்கிறார்கள்.
ஆனால், என்னை அறிந்தால் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.படத்தின் வினியோகம், வெளி மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை, மற்ற உரிமைகள் என அனைத்தையும் விற்ற வகையில் என்னை அறிந்தால் படம் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 10 கோடி வரை லாபம் கிடைத்திருக்கிறதாம். ஆனால், படத்தை எம்.ஜி. அடிப்படையில் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். அதே போல, என்னை அறிந்தால் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால், திரையரங்க வசூல் 100 கோடியைத் தாண்டவேயில்லை என்றும் சொல்கிறார்கள். மொத்தமாக சுமார் 70 கோடி வசூலைத் தாண்டியிருந்தாலே அதிகம் என்றும் சொல்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அனைவரும் சொல்லும் ஒரே விஷயம், படத்தின் வெளியீடு பொங்கலுக்கு இருந்திருந்தால், வசூல் நிலவரமே வேறாக இருந்திருக்கும் என்கிறார்கள்.
0 comments :
Post a Comment