News

அருண் விஜய்க்கு அஜித் மகளின் அன்புக் கடிதம் !

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா, நடித்து வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் மற்ற நடிகர்களை விட அஜித்திற்கும் ஒருபடி மேல் சென்று அருண் விஜய்யின் விக்டர் கதாபாத்திரம் பேசப்பட்டது.
அவருக்கு கிடைத்த வரவேற்பால் அருண் விஜய்யே கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாயகனாக நடித்துவந்த அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்தார். இவரது நடிப்பிற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. அவரை பாராட்டியதில் அஜித் மகள் அனோஷ்காவும் ஒருவர். அவரது பாராட்டை நினைத்து  நெகிழ்ந்து போனாராம் அருண் விஜய். 
அனோஷ்கா எழுதிய கடிதத்தில், முதன் முறையாக வில்லன் வேடம் ஏற்று நடித்ததற்கு பாராட்டுக்கள். சண்டைக் காட்சிகளில் உங்கள் நடிப்பு சூப்பர். என் அப்பாவுடன் இணைந்து நடிதத்தற்கு நன்றி என்று எழுதியிருந்தாராம். இதற்கு பதில் கடிதமும் அருண் விஜய் எழுதியுள்ளாராம். 


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment