சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். ஒளிப்பதிவு நட்ராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவின் அடர்ந்த காட்டுபகுதியில் நடந்துவருகிறது.
பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் ஏற்கனவே இரண்டு நாயகிகளாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்னொரு ரோலுக்காக நந்திதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் ஓகே சொல்லிவிட புலி படத்தில் இணைந்துள்ளார்.
இதுதவிர ‘அப்பா டக்கர்’ மற்றும் ’மாப்பிள்ளை சிங்கம்’ படங்கள் மூலம் தமிழுக்கு ரீஎண்ட்ரி ஆன அஞ்சலியிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அஞ்சலி நடிப்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகாத நிலையில் நந்திதா படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ’புலி’ படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனராம்.
0 comments :
Post a Comment