News

மரணத்தை எதிர்நோக்கும் 3 சிறுவர்களுடன் விஜய்

மரணத்தை எதிர்நோக்கும் 3 சிறுவர்களுடன் விஜய்:

சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் மூன்று குழந்தைகளுக்கு ரத்தப்புற்று நோய் இருந்ததாகவும், பல மருத்துவர்கள் பலவித சிகிச்சைகளை மேற்கொண்டும் அவர்களை காப்பாற்ற செய்த முயற்சிகள் அனைத்தும் வ
ீணானதால் அவர்கள் மூவய்ரும் மரணத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆதரவற்றோர் நிர்வாகம் அந்த மூவரிடமும் கடைசி ஆசை குறித்து கேட்டபோது, அவர்கள் மூவருமே நடிகர் விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக இந்த தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே அந்த மூன்று குழந்தைகளையும் சந்திக்க ஒப்புக்கொண்டார்.

மரணத்தை எதிர்நோக்கியுள்ள மூன்று சிறுவர்களையும் விஜய் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுடன் சில நிமிடங்கள் இருந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனால் மூன்று சிறுவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் சற்று முன்னர் விஜய்யின் அதிகாரபூர்வமான சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் செயலை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment