என்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்மெல்லிசா ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் வில்லன்களை அழிப்பதே... 'என்னை அறிந்தால்’! கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்பெஷல் போலீஸ் கதைகளின் இன்னும் ஓர் அத்தியாயம். ஆனால் ஆச்சர்யமான அஜித் படம்! கதையை அனுஷ்காவில் ஆரம்பித்து அஜித் - அருண் விஜய் நட்புக்குத் தாவி, மாஃபியா - போலீஸ் சேஸ் அடித்து, த்ரிஷா காதல், ஆசிஷ் பகை, உறுப்புக் கடத்தல்... எனப் பல சுற்றுகளுக்குப் பிறகு க்ளைமாக்ஸ். 'அதான் அஜித் இருக்காரே... எல்லாம் அவர் பார்த்துப்பார்’ என ஆர்ப்பாட்ட ஆக்ஷன்களை அடுக்காமல், ஒரு போலீஸ் ஆபீஸர், முதிர்ச்சியான காதல், காதலின் இழப்பு தரும் தடுமாற்றம்... என அஜித்தை வேறு ட்ரீட்மென்ட்டில் காட்டியிருக்கிறது கௌதம் மேஜிக்! படத்தில் அஜித்துக்கு கோட் இல்லை; ஆனால், கோடு இருக்கிறது. மெல்லிசான கோட்டுக்கு அந்தப் பக்கம் முரட்டுப் போலீஸாகவும், இந்தப் பக்கம் நல்ல வில்லனாகவும் மாஸ் காட்டியிருக்கிறார். ஆக்ஷனில் வெடிப்பதும் காதலில். . .
0 comments :
Post a Comment