News

மன்னிப்பு கேட்ட அஜித் - வித்யூலேகா நெகிழ்ச்சி !

வளர்ந்துவரும் காமெடி நடிகை வித்யூலேகா ராமன், தொடர்ந்து முன்னனி படங்களில் நடித்துவருகிறார். கௌதம் மேனனின் ‘நிதானே என் பொன்வசந்தம்’  மூலம் எண்ட்ரியானவர் தொடர்ந்து ’தீயா வேல செய்யணும் குமார்’, ‘ஜில்லா’,’வீரம்’ என பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்தார். 
தற்போது ’காக்கி சட்டை’ படத்தில் முதல் சீனிலேயே சிவகார்த்திகேயன் வளர்ந்த அஞ்சலி பாப்பா என கூறியிருப்பார். மேலும் தொடர்ந்து ’மாஸ்’, ‘புலி’,’வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’, மற்றும் ‘மாப்பிள்ளை சிங்கம்’ என பல படங்களில் நடித்து வருகிறார்.
’என்னை அறிந்தால்’ படத்துக்கு அஜித்துக்கு ஆல் த பெஸ்ட் என மெஸேஜ் அனுப்பியுள்ளார் வித்யூலேகா. அதற்கு அஜித் சமீபத்தில் பதில் அளித்தவர் மேலும் லேட்டானதற்கு மன்னிக்கவும் எனவும் கூறவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார் வித்யூலேகா. 
’தல மேஸேஜுடன் எழுந்தேன். ’நான் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு ஆல் த பெஸ்ட் என அனுப்பியதற்கு இப்போது பதிலுடன் கூடவே மன்னிக்கவும் எனவும் அனுப்பியுள்ளார். என்ன ஒரு ஸ்டார். வாவ் என ட்விட்டரில் மெய்சிலிர்த்துள்ளார். 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment