News

கார்டூனிஸ்ட்டாக நடிக்கும் விஜய்!


’கத்தி’ படத்தை தொடர்ந்து விஜய் சிம்புதேவனின் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா என பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் வருகிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தில் மூன்றாவதாக ஒரு கேரக்டரில் விஜய் இருக்கிறாராம். இதில் ஒரு விஜய் கார்டூனிஸ்டாகவும், இன்னொரு விஜய் குள்ளராகவும் , மற்றொரு விஜய்யின் கதாபத்திரம் ரகசியமாக வ்கைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை விஜய் மூன்று கெட்டப்களில் நடித்தால். ஒரே படத்தில் மூன்று கெட்டப்களில் விஜய் நடிக்கும் முதல் படம் இதுவாகவே இருக்கும். படத்தின் கதை, விஜய்யின் கெட்டப்கள் என அனைத்தும் ரகசியமாகவே வைத்துள்ளது படக்குழு. எனினும் இதுவரை பார்க்காத விஜய் படமாகவும், ஒரு பிரம்மாண்ட ஃபேண்டசி படம் பார்த்த அனுபவம் இந்த படத்தில் கிடைக்கும் எனவும் படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment